ARTICLE AD BOX
வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் தர்பூசணி சாப்பிடுவதை சூர்யா “கருப்பு” படத்தில் ரீகிரியேட் செய்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வாட்டர் மிலன் ஸ்டார்
“கஜினி” திரைப்படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டே கையால் சைகை காட்டி போகச்சொல்லும் காட்சியை ரீல்ஸாக செய்து இணையத்தில் பிரபலமானவர் திவாகர். ஆதலால் இவரை வாட்டர் மிலன் ஸ்டார் என்று பலரும் அழைக்கின்றனர். தான் ஒரு மிகச்சிறந்த நடிகர் எனவும் தனக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் எனவும் ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வரும் திவாகர், சமீபத்தில் சூரி போல் தன்னால் சின்ன சம்பளத்தில் நடிக்க முடியாது என கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது?

திவாகரை காப்பியடித்த சூர்யா?
இந்த நிலையில் இன்று வெளியான சூர்யாவின் “கருப்பு” படத்தின் டீசரில் “கஜினி” படத்தில் தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீகிரியேட் செய்யும் ஒரு காட்சித்துணுக்கு இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகரை சூர்யா காப்பியடித்துவிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் ட்ரோலாக எடுத்துக்கொள்கின்றனர் என்றாலும் இது சூர்யா ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் திவாகரே பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
