ARTICLE AD BOX
SRH-ன் அதிரடி ரன் மழை
2025 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மெகா ஸ்கோரை அடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.300 ரன்களை அடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கிய அவர்கள்,14 ரன்கள் குறைவாக 286/8 என்ற அபார ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தனர்.
இதையும் படியுங்க: ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க…ரஜினிகாந்தின் வைரல் வீடியோ.!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.தொடக்கத்திலிருந்தே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் அதிரடி காட்டி 14.1 ஓவரிலேயே 200 ரன்களை எட்டியது.
துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.மூன்றாம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 47 பந்துகளில் 106 ரன்கள் விளாசி,11 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடித்தார்.நிதிஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில் 30 ரன்கள்,ஹெய்ன்ரிச் கிளாஸன் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தனர்.இறுதியில் 20 ஓவர்களில் 286 ரன்களை குவித்தனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் நின்றனர்.இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி,ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

7 months ago
77









English (US) ·