வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

1 month ago 47
ARTICLE AD BOX

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக ஐந்து பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை.

கோவை தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று இரவு மாலை தொண்டாமுத்தூர் பகுதியில் நடந்து சென்றதாக தெரிகிறது.

இதையும் படியுங்க: காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சிறுமியை அங்கு இருந்து அழைத்துச் சென்று அருகில் உள்ள சித்தரசாவடி ராஜவாய்க்கால் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் பெண்ணை தொண்டாமுத்தூர் சாலையில் இறக்கி விட்டு சென்று உள்ளனர். அந்த பகுதியில் அழுது கொண்டு இருந்த பெண்ணை தோட்டத்தில் இருந்த முதியவர் பார்த்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார்.

Police arrest five people for sexually abusing a 14-year-old dumb girl

பின்னர் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து வந்து விசாரித்ததில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து தற்போது தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரை பிடித்து தனியார் தங்கும் விடுதியில் வைத்து தற்போது காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  • good bad ugly trailer release on 4th april டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…
  • Continue Reading

    Read Entire Article