ARTICLE AD BOX
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்க: மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?
சமீபத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் சில இடங்களில்,ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக தவறான தகவல்கள் பரவி வந்தன.இதனால் குழப்பம் ஏற்படக்கூடும் என்பதால்,நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எங்கள் நிறுவனம் எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நியமிக்கவில்லை.எங்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறி,ஏதேனும் தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் பணம் கேட்டு மோசடி செய்ய முயன்றால்,அவற்றை நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘தக்லைப்’ படத்தில் நடித்து வருகிறார்,இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. அதேபோல்,அன்பறிவ் இயக்கத்தில் உருவாகவுள்ள அவருடைய அடுத்த படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.