வாலி, குஷி படத்தை இயக்கியது எஸ்.ஜே.சூர்யா இல்லை- பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்

1 month ago 25
ARTICLE AD BOX

டாப் ஹிட் படங்கள்

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா விஜய்யை வைத்து இயக்கிய “குஷி” திரைப்படம் இன்னும் ஒரு படி மேலே சென்று வேற லெவலில் ஹிட் அடித்தது.

“குஷி” திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த ரீமேக்கையும் எஸ்.ஜே.சூர்யாவே இயக்கியிருந்தார். இவர் இயக்கிய “வாலி”, “குஷி” ஆகிய இரண்டு திரைப்படங்களும் காலத்தை தாண்டியும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக அமைந்தது. 

அவர் டைரக்ட் செய்யவில்லை…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் டி ஆர் ரமேஷ், “அந்த இரண்டு திரைப்படங்களையும் ஒளிப்பதிவாளர் ஜீவாதானே இயக்கினார். எஸ்.ஜே.சூர்யா எங்கே இயக்கினார். ஒளிப்பதிவாளர் ஜீவா இல்லை என்றால் இன்று தமிழில் முக்கால்வாசி இயக்குனர்கள் இல்லை. வசந்த், லிங்குசாமி போன்றவர்கள் சினிமாவில் நிலைத்ததற்கு காரணம் ஜீவாதான்.

vaalee kushi both films were not directed by sj suryah

ஜீவா எடுத்ததனால்தான் எஸ்.ஜே.சூர்யாவின் அந்த இரண்டு திரைப்படங்கள் வெற்றிபெற்றது. அந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாதான் இயக்கினார் என்றால் ஏன் அந்த இரண்டு படத்தில் நடித்த ஹீரோக்கள் இவருடன் மீண்டும் படம் நடிக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எஸ்.ஜே.சூர்யாவை பற்றி நன்றாக தெரியும்” என்று பேசியுள்ளார். 

தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் எஸ்.ஜே.சூர்யாவுடன் 25 வருடங்கள் நண்பராக பயணித்தவர். எஸ்.ஜே.சூர்யாவின் “இசை”, “இறைவி”, “பொம்மை” ஆகிய திரைப்படங்களின் இணைத் தயாரிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • vaalee kushi both films were not directed by sj suryah வாலி, குஷி படத்தை இயக்கியது எஸ்.ஜே.சூர்யா இல்லை- பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்
  • Continue Reading

    Read Entire Article