விக்ரம் கூட ரோபோ சங்கரின் மனைவி நடிச்சிருக்காங்களா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

1 month ago 24
ARTICLE AD BOX

கடின உழைப்பா சின்னத்திரயில் காமெடி நாயகனாக வலம் வந்து டிரெண்டானவர் ரோபோ சங்கர். மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து, தனுஷ், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்த ரோபோ சங்கர் நேற்று முன்தினம் திடீர் மரணடைந்தார். இது சினிமா உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமாகி வந்த அவர், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பில் இருக்கும் போது மயக்கமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதையடுத்து நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வளசரவாக்கம் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது. ஏரளாமான ரசிகர்கள், பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவர் உடல் தகனம் செய்ய ஊர்வலமாக மின் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது. அப்போது தனது கணவரை வழியனுப்ப மனைவி பிரியங்கா நடனமாடியது அங்குள்ளவர்களை கண்ணீர் குளமாக்கியது.

இந்த நிலையில் பிரியங்கா ரோபோ சங்கர் சில படங்களில் நடித்துள்ளார். அவர் தில் படத்தில் லைலாவுடன் இணைந்து ஒரு காமெடி காட்சியில் நடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Did Robo Shankar's wife act with Vikram விக்ரம் கூட ரோபோ சங்கரின் மனைவி நடிச்சிருக்காங்களா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
  • Continue Reading

    Read Entire Article