ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்டம் குருக்குலையா பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் இவரது திறமையை பாராட்டி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது தன்னுடைய ஊர் மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று எடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்க : இனி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு வேலை இல்லை…AI டெக்னாலஜி வைக்கும் ஆப்பு..!
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை நிதியிலிருந்து குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைப்பு கொடுத்தார்
தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்டை ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார் இதன் பின்னர் பொதுமக்களிடம் உரையாடியதோடு அந்த குடிநீரில் செய்த உணவுகளை அங்கேயே சாப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், கடந்த காலங்களில் விஜயசாந்தியை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று கூறினர். தற்போது நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என கூறுகின்றனர் அது தவறில்லை.
அதே வேளையில் தற்போது அவர் அதனை வேண்டாம் என்று சொல்கிறார்.
அது அவரது விருப்பம். விஜயகாந்த் போல் ஒருவர் தான் இருக்க முடியும் அவரைப் போல் வேறு யாரும் வர முடியாது,
அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் எனது நண்பர்,அவர் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். சமீப காலமாக ஜாதி ரீதியான திரைப்படங்கள் அதிக அளவு வருகிறதே ஜாதி திணிப்பு சினிமாக்களில் தலை தூக்குகிறது என்று அவரிடம் கேள்வி கேட்டபோது
படங்களில் ஜாதியை திணிப்பது தவறுதான என்றார்,
தன்னைப் போலவே நடிகர் பாலாவும் உதவிகள் செய்து வருவது வரவேற்கத்தக்கது இது யாரும் சொல்லி செய்யக் கூடாது தானாக செய்ய வேண்டும். தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இதைத் தொடர்ந்து பென்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இதே போலவே கால பைரவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்

7 months ago
55









English (US) ·