விஜய் என்கிட்ட ஒன்னு கேட்டார்..பல நாள் ரகசியத்தை உடைத்த ரம்பா.!

6 hours ago 4
ARTICLE AD BOX

விஜயுடன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்த நடிகை ரம்பா

1990-களில் முன்னணி நடிகையாக விளங்கிய ரம்பா,தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.”தொடையழகி” என்று பெயர் பெற்ற ரம்பா,உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்க: 2 வயது மகள் உயிரிழப்பு..உடைந்து போன பிரபல கிரிக்கெட் வீரர்.!

இந்நிலையில்,நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிகர் விஜயுடன் ரம்பா ஜோடி சேர்ந்தார்.இந்த படத்தில் விஜய்க்கு தேவயானி அக்காவாகவும்,ரம்பா காதலியாகவும் நடித்திருப்பார்கள்.

கதையின் ஒரு கட்டத்தில்,விஜய் கனவில் ஒரு பெண்ணை காண்பார்,அந்த பெண்ணின் இடுப்பில் மச்சம் இருக்கும்,அவளை தான் திருமணம் செய்துகொள்வேன் என முடிவெடுக்கிறார்,பிறகு அந்த பெண் ரம்பா தான் என தெரிந்ததும், இருவரும் காதலிக்கிறார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரம்பா,”நினைத்தேன் வந்தாய்” படத்தின் காட்சி குறித்து பேசும்போது,விஜய் சார் கனவு கண்டுக்கிட்டே இருப்பார்.நான் எங்கேயோ கயிற்றில் தொங்கிக்கொண்டு இருப்பேன்.,அவர் வேறு இடத்தில் ஆடிட்டு இருப்பார்,என்கிட்ட எங்க ஆடறீங்க? எந்த ஷூட்டிங் போயிட்டு வர்றீங்க? என்று விஜய் சார் கேட்டார்.நான் சார்,உங்க கூடத்தான் இங்க பாரஸ்ட்டுல டூயட் ஆடிக்கிட்டு இருக்கேன் என்றேன்,அதற்கு விஜய்,நான் இங்க விஜய் கார்டன்ல ஆடிட்டு இருக்கேன் என்று சொன்னார்,என் சினிமா வாழ்க்கையில் என்னிடம் பர்ஸ்ட் ஹீரோயின் போல கவலைப்பட்ட ஹீரோ விஜய் தான்,என்று பகிர்ந்தார்.

அதே நேரத்தில்,விஜயின் நல்ல மனதையும் பகிர்ந்த ரம்பா,ஒருமுறை அவர் லண்டன் செல்ல இருந்தபோது,விஜய் என்னிடம் உங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் சொல்லுங்க,நான் வாங்கிட்டு வர்றேன் என்று கேட்டார்.விஜய் ரொம்ப நல்ல மனிதர்,அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அந்த பேட்டியில் ரம்பா கூறியிருப்பார்.

  • Rambha about Vijay விஜய் என்கிட்ட ஒன்னு கேட்டார்..பல நாள் ரகசியத்தை உடைத்த ரம்பா.!
  • Continue Reading

    Read Entire Article