விஜய் சின்ன பச்சா… சுறாவா இல்ல சின்ன இறாவானு 2026 தேர்தலில் தெரியும் : பிரபல நடிகர் கிண்டல்!!

1 week ago 15
ARTICLE AD BOX

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச் செயலாளர் பூங்காவனம் தலைமையில் நகர இளைஞரணி அமைப்பாளர் அஜ்மல் வரவேற்பில் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர் வினோத்காந்தி மற்றும் பிரபல திரைப்பட நடிகரும் திமுக தலைமை பேச்சாளருமான M.R.R.வாசு விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடையே தமிழக அரசு செய்த சாதனை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள்.

அப்போது கூட்டத்தில் திரைப்பட நடிகர் M.R.R.வாசு விக்ரம் பேசுகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சுறா என்றால் திமுக கடல் அதில் பல லட்சம் சுறாக்கள் உள்ளது.

தவெக தலைவர் விஜய் “சின்ன பச்சா” 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய்க்கு தெரியும் அவர் சுறாவா இல்லை சின்ன இறா என்று தெரிய வரும் என கூறினார்.

மேலும் M.R.R.வாசு கூட்டத்தில் பேச தொடங்கிய போது திடீரென 2 மைக்குகளும் சரியாக ஒர்க் செய்யாததால் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே மைக்கை தூக்கி வீசியபடி தனது கோபத்தை முகத்தில் காட்டினார்.

அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து நடந்து மக்களை சந்தித்து வருகிற ஒரே முதல்வர் எனவும் ஒரு காலத்தில் மகாத்மா காந்தியை தேச பிதா மற்றும் நேரு மாமா ஆகியோரை அழைத்தார்கள்.

ஆனால் இப்போது கல்லூரி மாணவ மாணவிகள் தமிழக முதல்வரை அப்பா என அழைக்கிறார்கள். அந்த இடத்தில் மக்கள் அவரை வைத்து பார்க்கிறார்கள் என பெருமிதத்துடன் பேசினார்.

மேலும் பிரசார கூட்டத்தின் இறுதியாக கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே தனது தாத்தா பிரபல பழங்கால நடிகர் M.R.ராதா நடித்த “ரத்தக்கண்ணீர்” திரைப்படத்தில் வரும் வசனத்தை அப்படியே நடித்துக் காட்டி அசத்தினார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்
  • Continue Reading

    Read Entire Article