ARTICLE AD BOX
திருச்சியில் த.வெ.க பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பது தொடர்பாக த.வெ.க வழக்கறிஞர் பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் ஆதித்யசோழன், இமயதமிழன் ஆகியோர் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு திருச்சி மாநகர காவல் வடக்கு காவல்துறை துணை ஆணையர் சுபின் மற்றும் தெற்கு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
குறிப்பாக ரோடு ஷோ நத்தக்கூடாது, வாகனம் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்வது, விஜய் பிரச்சார வாகனத்திற்கு முன்பும், பின்பும் அதிக அளவில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் வரக்கூடாது உள்ளிட்ட 23கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்த 23 நிபந்தனைகள் அனைத்தையும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
பிரச்சார பயணத்திற்கான காவல்துறையினரின் அனுமதி கடிதம் மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
