ARTICLE AD BOX
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி, திருத்தணி என பல படங்களை இயக்கியிருந்தார்.
இதையும் படியுங்க: கடனை திருப்பி கேட்ட வங்கி.. விவசாய கடனை செலுத்த முடியாத திமுக நிர்வாகி விபரீத முடிவு!
தற்போது சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் பேரரசு, விஜய்யை போல உதயநிதியும் சினிமாவை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சினிமாவை விட்டு அரசியலக்கு போன விஜய் கட்சியை ஆரம்பித்துவிட்டார். இனி நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். இதற்கும் அவரு எந்த பதவியிலும் இல்லை. இன்னும் விஜய் அரசியல் வளரவில்லை, அப்படியிருக்கும்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால் உதயநிதி ஸ்டாலின், கட்சிக்கு வந்தாரு, எம்எல்ஏ ஆனாரு, அமைச்சர் ஆனாரு தற்போது துணை முதலமைச்சரும் ஆகவிட்டார். அரசியலில் இத்தனை உயரத்திற்கு வந்த பிறகும் கூட சினிமாவை தயாரிக்கிறார்.
அரசியலில் அவர் தீவிரமாக உள்ளதால், சினிமா தொழிலை அவர் கைவிட வேண்டும், அதை தவிர்க்க வேண்டும். விஜய் எப்படி படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறினாரோ, அதே போல இனி சினிமா தயாரிப்பில் ஈடுபட மாட்டேன் என கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.