ARTICLE AD BOX
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு தவெக ஒருபோதும் அதிமுக அல்லது திமுகவைப் போல செயல்படாது என்றும், திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படியுங்க: 200 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்.. பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த எஸ்பி வேலுமணி உறுதி!
இதைத் தொடர்ந்து, திமுக மற்றும் பாஜகவை வெளிப்படையாக விமர்சிக்கும் விஜய், அதிமுகவை ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியை அரசியல் நிபுணர்கள் எழுப்புகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுகவைப் பற்றி பேசிய விஜய், அதிமுகவைப் பற்றி ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை.
தவெக-வின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக உள்ளதா, இல்லையா? அதிமுகவை விஜய் விமர்சிக்கிறார், ஆனால் கொள்கை எதிரியாகக் குறிப்பிடவில்லை என்றே தோன்றுகிறது.
ஆளுங்கட்சியான திமுகவை எதிர்ப்பது பலருக்கும் இயல்பானது. பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்றுத் தருமானால், அதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார்.