விஜய் டிவி ஷோவுக்கு முட்டுக்கட்டை..யார் செய்த சதி.. ரசிகர்கள் ஆவேசம்.!

2 hours ago 3
ARTICLE AD BOX

அரசியல் அழுத்தம் காரணமா?

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் “நீயா நானா?” நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான விவாத நிகழ்ச்சியாக இருக்கிறது.

இதையும் படியுங்க: என் மூஞ்சி..என்ன வேணா பண்ணுவன்..பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பிரபல நடிகை பளார்.!

ஒவ்வொரு வாரமும் புதிய விவாதத் தலைப்புகளை முன்வைத்து மக்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி,பலராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,மார்ச் 4ஆம் தேதி விஜய் தொலைக்காட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில்,”மும்மொழிக் கொள்கை – ஆதரவு VS எதிர்ப்பு” என்ற தலைப்பில் நீயா நானா விவாத நிகழ்ச்சி பற்றிய விளம்பரப் பதிவு ஒன்றை வெளியிட்டது.இதை தொடர்ந்து,இந்த வாரமான இன்று இந்த விவாதம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,எதிர்பார்ப்புக்கு மாறாக,மும்மொழிக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பை விஜய் டிவி ரத்து செய்தது.இதனால்,சமூக வலைதளங்களில் விஜய் டிவி நிர்வாகத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இன்று "நீயா நானா" நிகழ்ச்சியில் மும்மொழிக் கொள்கை பற்றிய விவாதம் ஒளிபரப்பாகும் எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திடீரென அது நிறுத்தப்பட்டிருக்கிறது.

இது வெறும் நிகழ்ச்சி ரத்து இல்லை; கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான தெளிவான அடையாளம்.… pic.twitter.com/Mg43oYHxF6

— Black Panther (@Ranjith_Rayappa) March 16, 2025

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் போனதற்கு முக்கிய காரணம் அரசியல் அழுத்தம் என்று கூறப்படுகிறது.தமிழக அரசும்,பல்வேறு மொழி அமைப்புகளும் மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில்,விஜய் டிவி நிர்வாகம் அரசியல் விமர்சனங்களை தவிர்க்க இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கேள்வியும் எழுந்துள்ளது.

  • Neeya Naana Controversy விஜய் டிவி ஷோவுக்கு முட்டுக்கட்டை..யார் செய்த சதி.. ரசிகர்கள் ஆவேசம்.!
  • Continue Reading

    Read Entire Article