ARTICLE AD BOX
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி
நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.அப்போது நடிகர் சூர்யாவை பலரும் பல விதமாக விமர்சித்து தள்ளினார்கள்.
இதையும் படியுங்க: 25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!
அந்த சமயத்தில் பலநாட்கள் அமைதி காத்த ஜோதிகா திடீரென தன்னுடைய ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் தெரிவித்து,சூர்யா மற்றும் கங்குவா பட குழுவிற்கு ஆதரவரை தெரிவித்தார்,சூர்யா குடும்பம் சமீபத்தில் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
ஜோதிகா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார்,இந்த நிலையில் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘டப்பா கார்டெல்’ வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதால்,ஜோதிகா அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக தன்னுடைய சமூக வலைதளத்தில் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்,சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் பதிவிட்ட ஒரு போட்டோவிற்கு கீழே ரசிகர் ஒருவர் “விஜய் தான் உங்கள் கணவரை விட சிறந்தவர்” என கமெண்ட் செய்துள்ளார்,உடனே ஜோதிகா அதற்கு ஒரு சிரிப்பு எமோஜியை கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த மற்ற ரசிகர்களும் அந்த கமெண்ட் செய்த ரசிகரை இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

8 months ago
94









English (US) ·