ARTICLE AD BOX
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, தேர்தலுக்காக பல பணிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தவெக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் திமுகவுக்கு எதிரான விமர்சனத்தை முன் வைத்த அவர், பாஜகவையும் கடுமையாக சாடியிருந்தார்.
இதையும் படியுங்க: ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். இதை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.
சினிமா பாடகி சுசித்ரா, விஜய் மீது குற்றச்சாட்டை வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சியில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளித் தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப்பெபாருள் வைத்து வழங்குவார் என சுசித்ரா கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார்.
இந்த குற்றச்சாட்டின் மீது ஏன் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை,. விஜய் மற்றும் திரிஷா மீது விசாரணை நடத்தாது ஏன்? இவரெல்லாம் ஒரு கட்சியை ஆரம்பித்து போதைப் பொருள் தடுப்பு குறித்து பேச என்ன தகுதி உள்ளது என சரமாரியாக விமர்சனம் செய்தார்.

7 months ago
93









English (US) ·