ARTICLE AD BOX
மதுரை மாநகர் கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடை திறப்புவிழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார்.
அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் செல்பி எடுப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வருகை தந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அருகில் இருந்த பெண் ஒருவரை தள்ளிவிட்டபடி செல்பி எடுக்க வந்தார்.

அப்போது அந்த பெண் தடுமாறியதை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர் மீது கோப்பட்டதோடு இது போன்று பெரியவங்கள தள்ளிவிட்டுட்டு செல்பி எடுக்க வரக்கூடாது என கடிந்துகொண்டார். பின்னர் செல்பி எடுத்தார்.
பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நகைக்கடை உரிமையாளர் கையை பிடித்தபடி பத்திரமாக அழைத்துசென்று ஒவ்வொரு நகைகளையும் காண்பித்தார்.

இதனையடுத்து நடிகை ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் பாட்டு பாடுங்கள் என கேட்க மற்றொரு ரசிகரோ அண்ணன் ஒரு பாட்டு கேட்கிறாரு சொல்லும்போது அண்ணாச்சி அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சு என்னாச்சு என கலாய்த்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் : மதுரையில் அடிக்கடி க/பெ ரணசிங்கம் பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சூட்டிங்கிற்காக வந்திருக்கிறேன்.
மதுரையில் சாப்பாடு மிகவும் பிடிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் எனக்கு பிடித்த கடவுள். மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லுவேன் இந்த முறை செல்ல முடியவில்லை.
மதுரையில் சாப்பாடு அருமையாக இருக்கும் நான் HARDCORE NON- வெஜிடேரியன் எனவும், ஆனால் அங்கிள் வெஜிடேரியன் அவர் முன்பாக பேசக்கூடாது என நகைக்கடை உரிமையாளரை பார்த்து கூறினார்.

அடுத்த படங்கள் தொடர்பாக பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்விக்கு இல்லை என கூறி அடுத்தநொடியே விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா என கேட்ட போது எனக்கு அதில் எந்த விருப்பமும் இல்லை என பதிலளித்தார்
மூன்று தலைமுறைகாக உங்கள் குடும்பத்தினர் நடித்து வருகிறீர்கள் என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது தாத்தா அப்பா எல்லாரும் மேல போயிட்டாங்க நான் தனியா வந்து சமாளிச்சுக்கிட்டு இருக்கேன் என கேஷுவலாக பதில் அளித்தார்.

பின்னர் நகைக்கடை உரிமையாளரை பார்த்து ஏன் என்னையும், ஆண்ட்ரியாவை மட்டும் நகை கடை திறப்பு விழாவிற்கு அழைக்கிறீர்கள் என அங்கிளிடம் கேளுங்கள் என செய்தியாளர்களை பார்த்து கூறினார். அப்போது அதற்கு பதிலளித்த நகைக்கடை உரிமையாளர் இரண்டு பேரும் கை ராசியானவர்கள் எனக் கூறி சிரிப்புகளை கொட்டினார்.
