ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: ஜெயலலிதாவின் தம்பி என்று அழைக்கும் அளவுக்கு அரசியல் செய்தவன் நான்.. திருமாவளவன் வைத்த டுவிஸ்ட்!
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இதை கண்டித்து தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி சார்பில் ஜூலை 6ல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் நீதிமன்றம் படியேறிய தவெக வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தவெக போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி கொடுத்தனார். இந்த நிலையில் வரும் 13ஆம் தேதி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டடுள்ளது.

இந்த போராட்டத்தல் விஜய் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவராக உருவெடுத்துள்ள விஜய், இந்த போராட்டத்தில் பங்கேற்றால் இதுவே அவர் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.