விஜய் பட தயாரிப்பாளரை கைது செய்ய உத்தரவு? அதிரடி காட்டிய நீதிமன்றம்!

1 month ago 13
ARTICLE AD BOX

விஜய் பட தயாரிப்பாளர் மீது வழக்கு

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ராம நாராயணன். இவர் 1976 ஆம் ஆண்டு தேனாண்டாள் பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தும் வந்தார்.

ராம நாராயணன் 2014 ஆம் ஆண்டு மறைந்துபோனதை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ராம நாராயணனின் மகனான என்.ராமசாமியின் கைகளுக்குச் சென்றது. தற்போது ராமசாமியே இந்நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இவர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய்யின் “மெர்சல்” திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு தயாரித்திருந்தார். அதனை தொடர்ந்து “வல்லவனுக்கு வல்லவன்”, “Mr Housekeeping” போன்ற திரைப்படங்களை தயாரித்தார். இந்த நிலையில் மலேசியாவைச் சேர்ந்த ஐஜி குளோபல் பிலிம்ஸ் என்ற நிறுவனம் என்.ராமசாமி மீது ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது.

ஏன் வழக்கு?

அதாவது ஐஜி குளோபல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் திரைப்படங்களை வாங்கி வெளியிட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததாம். இந்த நிலையில் வியாபார தேவைகளுக்காக தேனாண்டாள் பிலிம்ஸின் என்.ராமசாமி, ஐஜி குளோபல் பிலிம்ஸ் நிறுவனத்தாரிடமிருந்து ரூ.26 கோடி கடன் பெற்றுள்ளார். பல்வேறு தவணைகளில் இந்த தொகையை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த கடன் தொகைக்காக தேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனம், ஐஜி குளோபல் நிறுவனத்திற்கு கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் திரும்பி வந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில்தான் என்.ராமசாமி மீது காசோலை மோசடி சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஐஜி குளோபல் நிறுவனம் சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது உத்தரவை மாற்றி ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டது மட்டுமல்லாது, என்.ராமசாமியை அக்டோபர்  3 ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தேணான்டாள் பிலிம்ஸ் சார்பாக எவரும் ஆஜராகததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

  • mersal movie producer arrest warrant விஜய் பட தயாரிப்பாளரை கைது செய்ய உத்தரவு? அதிரடி காட்டிய நீதிமன்றம்!
  • Continue Reading

    Read Entire Article