ARTICLE AD BOX
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிக்கரமாக நடத்தினார்.
அப்போது அவர் பேசிய பேச்சு சினிமாத்தனமாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது. இருப்பினும் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அவர் பேசியது இன்றளவும் எதிரொலிக்கிறது.
இதையடுத்து மதுரையில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை, அங்கிள் என குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையானது.
என்னதான் எதிரியாக இருந்தாலும், மரியாதை இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சாடின. மரியாதையான சொற்களை மரியாதையான இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜய், நாகையில் பேசும் போது, மரியாதையாக கூப்பிட்டால் பிடிக்க மாட்டிங்குது என்பதால் சிஎம் சார் என பேசினார். விஜய் பேசிய இதுவும் சினிமாத்தனமாக உள்ளது. பஞ்ச் டயலாக் பேசுவது போன்று உள்ளது என மீண்டும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் உரையில் மாற்றம் காணப்பட்டதாக அரசியல் விமர்சகர் சுமந்த்ராமன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: “விஜய் வேகமாக கற்றுக் கொண்டுள்ளார். இன்று அவரது பேச்சு சுருக்கமாகவும் நேரடியாகவும் இருந்தது. சினிமா பாணியில் பஞ்ச் வசனம் பேசாமல், விஷயத்திற்கு நேரடியாகச் சென்றுவிட்டார்,” என பாராட்டினார்.
Vijay is learning fast. His speech is decidedly better today. More hard hitting and less filmy……#Vijay
— Sumanth Raman (@sumanthraman) September 27, 2025இந்த பதிவு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதில் சிலர், “விஜய் இன்னும் தேர்தலில் கூட நிற்கவில்லை. அப்படி இருக்கையில் ‘மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்று பேசியது அவசியமா? இன்னும் பேச்சு முறை மேம்பட வேண்டும்,” என விமர்சித்துள்ளனர்.
இவ்வாறு, விஜய்யின் அரசியல் மேடைப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.
