விஜய் போட்ட திடீர் கண்டிஷன்? ரசிகர்களுக்கு பேரிடியை கொடுத்த சம்பவம்!

1 month ago 39
ARTICLE AD BOX

அரசியல்வாதி விஜய்

விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் விரைவில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொள்கை எதிரி, அரசியல் எதிரி என தான் அறிவித்த கட்சிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் விஜய். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விஜய் தனது கையால் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கும் முதல் கட்ட கல்வி விருது விழா வருகிற 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு முழு நேர அரசியல்வாதியாக மாறி வரும் விஜய் தற்போது இட்டுள்ள நிபந்தனை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

vijay put condition that no jana nayagan update in his birthday

எதுவும் வெளிவரக்கூடாது?

வருகிற ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எப்போதும் விஜய் பிறந்தநாள் வரும்போது அவர் நடிக்கும் திரைப்படங்களின் First Look அல்லது டீசர் வெளிவருவது வழக்கம். ஆனால் இந்த பிறந்தநாளில் “ஜனநாயகன்” திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளாராம் விஜய். 

அதாவது விஜய் தற்போது அரசியல் தளத்தில் முழு வேகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளதால் அதனை திசை திருப்புவது போல் “ஜனநாயகன்” அப்டேட்டுகள் இருந்துவிட கூடாது என்பதில் கவனத்துடன் உள்ளாராம். ஆதலால் “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீடு நெருங்கும் சமயத்தில் அத்திரைப்படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டுக்கொள்ளலாம் என படக்குழுவினரிடம் கூறிவிட்டாராம். இத்தகவலால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். 

  • vijay put condition that no jana nayagan update in his birthday விஜய் போட்ட திடீர் கண்டிஷன்? ரசிகர்களுக்கு பேரிடியை கொடுத்த சம்பவம்!
  • Continue Reading

    Read Entire Article