ARTICLE AD BOX
கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வருகிறார் விஜய். அவரின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் ஃபிலிம் டெக்னாலஜி படித்தவர். அவர் இயக்கிய குறும்படம் ஒன்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஜேசன் சஞ்சய் சந்தீப் கிசானை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப மாதங்களாக மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகளுக்கு ரூ.8 கோடி தேவைப்படுகிறதாம். அந்த 8 கோடியை லைகா நிறுவனத்தால் ஏற்பாடு செய்ய முடியவில்லையாம். இதன் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.

ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்து வரும் நிறுவனம்தான் லைகா. ஆனால் சமீப காலமாக லைகா நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் நஷ்டத்தைதான் கொடுத்தது. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “விடாமுயற்சி” திரைப்படம் கூட லைகா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது. இந்த நிலையில்தான் லைகா நிறுவனத்தால் ரூ.8 கோடி கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
