ARTICLE AD BOX
தவெக தலைவர்…
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில் ஏற்கனவே சூடு பிடித்துக்கொண்டிருந்த தமிழக அரசியல் மேலும் சூடு பிடித்துக்கொண்டது. தனது கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்த அவர், திமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என வெளிப்படையாகவும் அறிவித்தார். இவ்வாறு தமிழக அரசியலில் விஜய்யின் பல நடவடிக்கைகளும் பேச்சுக்களும் கவனத்தை குவித்துள்ளது.

விஜய்க்கு தைரியம் வந்ததற்கு காரணம்!
இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக்கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது” என கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கல்யாணசுந்தரம்’
போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம்.
ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னெரு… pic.twitter.com/ub6IxkpxzJ
