ARTICLE AD BOX
சொர்ணமால்யா முதலில் தொகுப்பாளினியாக இருந்தவர். அப்போதே தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர். சிரித்து சிரித்து பேசியே அனைத்து விஷயங்களையும் வாங்கிவிடுவார்.
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, மொழி, எங்கள் அண்ணா உட்பட சில படங்களில் நடித்திருந்தவர். தற்போது குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.
இதையும் படியுங்க: சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு.. கோவை பாரதியார் பல்கலை.,க்கு விடுமுறை : தேடும் வனத்துறை!
முன்னதாக சொர்ணமால்யா ஏராளமான திரை பிரபலங்களுடன் நேர்காணலில் ஈடுபட்டிருந்தார். அதில் நடிகர் விஜய்யை அவர் பேட்டி எடுத்த போது போட்டு வாங்கலாம் என முயற்சி செய்து கடைசியில் விஜய்யிடம் தோற்றிருப்பார். இந்த வீடியோவை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
குறிப்பாக அந்த வீடியோவில், திருமலை படத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட பேட்டியின் போது, சொர்ணமால்யா விஜய்யிடம், படத்தில் சென்னை ஸ்லேங்கில் பேசியுள்ளீர்களே, இப்போது அந்த படத்தில் இருந்து ஒரு வசனத்தை அந்த ஸ்லாங்கில் பேசி காட்டுங்கள் என கூறியிருப்பார்.
விஜய்யோ ஸ்மார்ட்டாக, வசனத்தை டிவியில் சொல்லிட்டா எப்படி? தியட்டவருக்கு வந்து படத்தை பாரு என செம மாஸாக பேசி நோஸ் கட் செய்துள்ளார்.
Chennai Tamil Slang la Thalapathy Vijay 🔥 🔥
Old is Gold#JanaNayagan #Thirumalai #ThalapathyVijay pic.twitter.com/C8DYoV0VFu
விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் தனது சினிமா கேரியரில் கடைசி என கூறியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வேறு ஒரு டிரான்ஸ்பார்மில் அரசியலில் நுழைந்துள்ளார்.