ARTICLE AD BOX
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், ரஜினி முருகன், பைரவா, தொடரி, சர்க்கார், ரெமோ என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தார்.
இதையும் படியுங்க: பிச்சை கூட எடுப்பேன்..அவர் கூட நடிக்க மாட்டேன்..நடிகை சோனா அட்டாக்.!
தொடர்ந்து தெலங்கில் இவர் நடித்த மகாநதி படம் ஹிட் ஆனது மட்டுமல்லாமல், தேசிய விருதை வாங்கி கொடுத்தது. தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த அவர் திடீரென 2024ஆம் வருடம் கடைசி மாதம் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் இவர் நடித்த பாலிவுட் திரைப்படமான பேபி ஜான் வெளியானது. இந்த நிலையில் விஜய் – கீர்த்தி சுரேஷ் இணைத்து பல சர்ச்சைகள் வெளியானது. ஆனால் அதற்கெல்லாம் அவருடைய திருமணம் முற்றுப்புள்ளி வைத்தது.
மேலும் சினிமாவில் நுழைந்த போதே தான் ஒரு விஜய் ரசிகை என கீர்த்தி பல மேடைகளில் கூறி வந்தார். இந்த நிலையில் விஜயை போலவே ரஜினி முருகன் படத்தில் ஒரு மேனரிசம் செய்திருப்பார் கீர்த்தி.
இது குறித்து அந்த படத்தின் இயக்குநர் பொன்ராம் கூறும் போது, எனக்கு பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்தான், அவர் உன் மேல ஒரு கண்ணு பாடலில் விஜய்யை ஃபாலோ செய்தார் என கூறி வருகிறார்கள்.
அது தவறு, நான் அந்த பாடலில் கீர்த்தியின் மேனரிசத்தை வைக்க பிருந்தா மாஸ்டரிடம் சொன்னேன், யாரையும் காப்பி அடித்து நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்தது இல்லை என கூறினார்.

7 months ago
101









English (US) ·