ARTICLE AD BOX
விஜய் VS ரஜினி
“வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் கூறியதை தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் மோதல் பற்றிக்கொண்டது. இரு அணியினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி மோசமான கருத்துகளை அள்ளித் தெளித்து வந்ததை தொடர்ந்து “ஜெயிலர்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய “காக்கா-கழுகு” கதை இணையத்தில் இரண்டு ரசிகர்களின் மோதலை மேலும் பற்றவைத்தது.
காக்கா என்று ஒரு நடிகரையும் கழுகு என்று இன்னொரு நடிகரையும் குறிப்பிட்டு பல மீம்கள் வெளிவந்தன. இவ்வாறு சமூக வலைத்தளமே கலவரமாகிப்போனது. இதனை தொடர்ந்து விஜய் VS ரஜினி என்ற கருத்தாக்கம் சமூக வலைத்தளத்தில் இரண்டு ரசிகர்களிடையே உருவானது.
ஜனநாயகன் கிளிம்ப்ஸ்!
நேற்று ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்தது. இதில் விஜய் போலீஸ் உடையுடன் தோன்றினார். அந்த வகையில் இத்திரைப்படத்தில் விஜய் காவல் அதிகாரியாக நடிக்க உள்ளது தெரிய வந்துள்ளது.
கூலி அப்டேட்?
“ஜனநாயகன்” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்த ஒரே நாளில் இன்று “கூலி” படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், “விஜய்யுடன் ரஜினிகாந்த் மீண்டும் போட்டிப்போடுகிறார்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sound ah Yethu 📣🔊
6⃣ PM today ⏳
“கூலி” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின், நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உட்பட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.