விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

2 weeks ago 19
ARTICLE AD BOX

தொடர் மரணங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பஞ்சுருளி என்ற பழங்குடியின தெய்வத்தை மையமாக வைத்து இத்திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடனும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

“காந்தாரா” திரைப்படத்தின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திலும் ரிஷப் ஷெட்டியே நடித்து வருகிறார். அவரே இத்திரைப்படத்தை இயக்கியும் வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டதில் இருந்து பிரச்சனைகளும் தொடங்கியது.

kantara movie crew shooting boat fell on river

அதாவது இத்திரைப்படத்தில் நடித்த ராகேஷ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு நடனமாடிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு வந்து உயிரிழந்தார். அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடித்த துணை நடிகரான கபில் என்பவர், சௌபர்ணிகா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

இந்த இருவரை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த விஜு என்ற கேரளாவைச் சேர்ந்த நடிகர் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு வந்து உயிரிழந்தார். இவ்வாறு இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தொடர்ந்து மரணமடைந்து வருவது பல அமானுஷ்ய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒரு வேளை பஞ்சுருளி தெய்வத்தின் சாபமாக இருக்குமோ என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதனால் படக்குழுவினர் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று நடந்த மற்றொரு விபத்து

இந்த நிலையில் நேற்று கர்நாடகாவின் மாணி அணையின் நீர்த்தேக்கத்தில் ஒரு படகில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்படகில் படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி, துணை நடிகர்கள், ஒளிப்பதிவு டெக்னீசியன்கள் உட்பட 30 பேருக்கும் மேல் இருந்தனர். அப்போது திடீரென படகு கழிந்துவிட்டது. அந்த 30 பேரும் நீரிக்குள் விழுந்தனர்.

எனினும் ஆழம் குறைவாக இருந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்ததால் படக்குழுவினர் நீச்சல் அடித்து கரைக்கு வந்து சேர்ந்ததாக கூறுகின்றனர். ஒரு சிலரை மீட்புக்குழுவினர் மீட்டதாகவும் கூறுகின்றனர். இந்த விபத்தில் கேமரா உள்ளிட்ட பல கருவிகள் நீரில் மூழ்கி நாசமாகின. எனினும் அதிர்ஷ்டவசமாக எவர் உயிருக்கும் எந்த சேதாரமும் இல்லை. இத்திரைப்படத்தில் பணியாற்றிய மூன்று நடிகர் தொடர்ச்சியாக மரணமடைந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் படகு கழிந்துவிட்டதாக வெளிவந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • kantara movie crew shooting boat fell on river விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…
  • Continue Reading

    Read Entire Article