ARTICLE AD BOX
டிராகன் vs விடாமுயற்சி
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக ‘டிராகன்’ மாறியுள்ளது,உலகம் முழுவதும் ரூ.140 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.இது,மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் வசூலை தற்போது முறியடித்துள்ளது.
இதையும் படியுங்க: இனிமேல் இப்படித்தான்… ஒரே படத்தில் மூன்று நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் நடிகர்!
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியானது,த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.லைகா தயாரித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகம் முழுவதும் ரூ.135 கோடிக்கு மேல் வசூலித்தது.
மறுபுறம்,அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், ஜார்ஜ் மரியா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம்,ரூ.36 கோடி பட்ஜெட்டில் உருவாகியது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு,ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து திரையரங்கில் வெற்றிகரமாக தற்போதும் ஓடி வருகிறது. இதன் மூலம் ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலையும் தாண்டி,இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை ‘டிராகன்’ பெற்றுள்ளது.