ARTICLE AD BOX

விடுமுறை முடிந்து சென்னை திரும்புறீங்களா? வந்தாச்சு SPECIAL TRAIN.. நெல்லைவாசிகள் குஷி!!
வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடந்த நிலையில், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கூடுதலாக விடுமுறை கிடைத்ததால் பலர் விடுமுறை முடிந்து இன்று இரவு சென்னை திரும்ப உள்ளனர்.
இன்று இரவு சென்னை திரும்பும் பயணிகளுக்கு வசதியாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இன்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 10.15க்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாளை பகல் 12.45க்கு புறப்படும் ரயில் நாளை நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த ஓட்டு சதவீதம்… 3வது முறையாக திருத்தம் செய்த தேர்தல் ஆணையம்!!!
நெல்லையில் இருந்து கிளம்பும் இந்தச் சிறப்பு ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று காலை 10.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.
The station விடுமுறை முடிந்து சென்னை திரும்புறீங்களா? வந்தாச்சு SPECIAL TRAIN.. நெல்லைவாசிகள் குஷி!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.