ARTICLE AD BOX
கலவையான விமர்சனம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியான் “தக் லைஃப்” திரைப்படம் அதிகளவு எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அது மட்டுமல்லாது இத்திரைப்படத்தை மிக கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர்.
“மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் இது ஒரு மோசமான படைப்பு” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் “திரிஷாவுக்காக கமல்ஹாசனும் அவரது வளர்ப்பு மகனான சிம்புவும் போட்டி போடுகின்றனர். இதுதான் உங்க Thug Life ஆ?” என கிண்டலும் செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாது “இது என்ன பிட்டு படமா? என்றளவுக்கெல்லாம் மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது இத்திரைப்படம்.

கவலைகிடமான நிலையில் தக் லைஃப்
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வசூல் விவரங்கள் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இத்திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் ரூ.37 கோடியே வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலகளவில் இதுவரை ரூ.50 முதல் 70 கோடியே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தின் மீது குவியும் நெகட்டிவ் விமர்சனங்களால் இத்திரைப்படத்தின் வசூல் பாதிப்புக்குள்ளாகி இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
