ARTICLE AD BOX
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்குள்ளானது அழியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்தளாக தகவல் வெளியாகியுள்ளன,
இதையும் படியுங்க: ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளே.. ரெட் அலர்ட் காரணமாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
இந்த விமானம் பிஜே மருத்துவக்கல்லூரி விடுதியின் மீது விழுந்ததால், அங்கு இருந்து மாணவர்கள் 5 பேர் பலியாகினர். இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.
 மேலும் விபத்தில காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவுகள் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.
அதே போல விபத்தில் சேதமடைந்த பிஜே கல்லூரி புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினர் ஆதரவையும் வரவேற்பையும் கூறி வருகின்றனர்.
 
                        4 months ago
                                43
                    








                        English (US)  ·