ARTICLE AD BOX
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொங்கி விபத்துக்குள்ளானது.
மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானம் கீழே விழுந்துள்ளது.
இதையும் படியுங்க: மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்.. 60 டாகடர்களின் கதி என்ன?
லண்டன் புறப்பட்ட போயிங் 787 விமானத்தில 242 பயணம் செய்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து 1.17 மணிக்கு புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கும் முயற்சியின் போது விமானம் கீழே விழுந்து தீ பிடித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான விபத்தில் தற்போது வரை 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்து காரணமாக அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வெடித்து சிதற காரணம் என்ன என கூறப்படுவது இதுதான்!
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல புறப்பட்ட உடனேயே 5 நிமிடத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்தது
கட்டுப்பாட்டை இழந்ததும் அபாயத்தை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டுள்ளார்
நிலைமை மோசமானதை தொடர்ந்து 1.38 மணிக்கு May Day Call எனப்படும் அபாயத்தை தெரிவிக்கும் சிக்னலை விமானி அனுப்பியுள்ளார்
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பதில் வருவதற்கு முன்னரே ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துள்ளது
போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் லண்டன் செல்ல வேண்டியது என்பதால் எரிபொருள் முழுவதுமாக நிரப்பப்பட்டிருந்தது. வெள்ளை பெட்ரோல் 58,000 லிட்டர் இருந்ததாக கூறப்படுகிறது..

முழு அளவில் எரிபொருள் இருந்த காரணத்தினால் தான் கீழே விழுந்ததும் பயங்கரமாக விமானம் வெடித்து சிதறியுள்ளது. மேலும் பறவைகள் மோதியதால விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என DGCA கூறியுள்ளது. 1.38 மணிக்கு May day சிக்னல் சிறிது நேரத்தில் வந்ததாக கூறிய DGCA, 2 என்ஜினிலும் பறவைகள் மோதியது விபத்துக்கான காரணமாக இருக்கலா என கூறியுள்ளது.
