ARTICLE AD BOX
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தர்மராஜ் மற்றும் விக்னேஷ் இவர்கள் இருவரும் அவ்வப்போது கிரிக்கெட் விளையாடி வருவது வழக்கம்.
இந்நிலையில் தர்மராஜ் இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ரசிகராகவும் விக்னேஷ் இந்தியா கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் ரசிகராகவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது ஐபிஎல் சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இவர்களின் பேச்சு ஐபிஎல் பக்கம் திரும்பியது அப்போது விக்னேஷ், விராட் கோலியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் விக்னேஷை மது அருந்த செல்லலாம் என பொய்யூர் அருகே உள்ள ஓடைப்பகுதிக்கு தனியாக கூட்டி சென்று கிரிக்கெட் பேட்டால் அடித்ததில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ் வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையில் விக்னேஷை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த தர்மராஜுக்கு ஆயுள் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா உத்தரவிட்டார்.
