‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

1 week ago 8
ARTICLE AD BOX

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை ஜீரோ என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க: தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

சமீப காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என புகழப்படும் பாபர் அசாம் தனது சமீபத்திய ஆட்டங்களில் நிலையான செயல்பாடைக் காணவில்லை.சாம்பியன்ஸ் கோப்பை தொடரில்,நியூசிலாந்து அணிக்கு எதிராக,81 பந்துகளில் அரைசதம் அடித்து,மெதுவாக விளையாடினார். இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், மொஹ்சின் கான் கூறியது பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டால்,விராட் கோலி ஒரு ஜீரோ.

Babar Azam vs Virat Kohli

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை சரியாக திட்டமிடப்படவில்லை என்றும்,பாபரை மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாகவே ஆட வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.மேலும், பாகிஸ்தான் அணிக்கு சரியான திட்டமிடல்,அணிவகுப்பு,பயிற்சி முறைகள் இல்லை என்பதையும் குறிப்பிட்டார்.

மொஹ்சின் கானின் இந்த கருத்து இந்திய ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.ஏனெனில்,விராட் கோலி தற்போது ஒன்று நாள் கிரிக்கெட்டில் உலகிலேயே மூன்றாவது அதிக ரன்கள் குவித்த வீரர். விரைவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உள்ளார்.ஐசிசி போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய தோல்விகளுக்கு நேரடி காரணங்களை கண்டுபிடிக்காமல்,மொஹ்சின் கான் விராட் கோலியை குறிவைத்து விமர்சித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!
  • Continue Reading

    Read Entire Article