ARTICLE AD BOX
வேலூரில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேலூரில் உள்ள தனியார் (ஊரீஸ்) கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன் இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: பப்ளிக் எக்ஸாம் எழுத வந்த மாணவியிடம் Bad Touch செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்.. தேர்வறையில் கொடூரம்!
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கௌரவ விரிவுரையாளர் வேலூர் எஸ்.பி மதிவாணனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதாவிற்கு உத்தரவிட்ட நிலையில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.