ARTICLE AD BOX
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்து, தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு தொழிலதிபர் சொஹைல் கத்துரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹன்சிகா, தற்போது கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பிரிந்து வாழ்ந்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹன்சிகாவின் சகோதரரின் மனைவி நான்சி, ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது பிறந்த வீட்டில் இருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொண்டு வருமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது குடியிருப்பை (flat) விற்குமாறு மிரட்டியதாகவும் நான்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, ஹன்சிகா தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட FIR-ஐ ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை தொடர உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹன்சிகா மீது விசாரணை நடத்த காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனவும், தேவைப்பட்டால் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பாலிவுட் மற்றும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
