ARTICLE AD BOX

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அண்ணா சிலை முன்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மின் கட்டண உயர்வை கண்டித்தும் சட்ட ஒழுங்கு பாதிப்புகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு நியாய விலை கடைகளில் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் விரைவில் திமுக அரசு கவிழும் எனவும் அதிமுக பொதுக்குழு விதியின்படி நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் மூத்த உறுப்பினர்களை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை குழு உறுப்பினர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்
The station விரைவில் திமுக அரசு கவிழும்… அதிமுக அவைத் தலைவர் அடுக்கிய காரணங்கள்!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.