வில்லனாக நடிப்பாரா விஜய்சேதுபதி…கொக்கி போடும் வில்லங்கமான இயக்குனர்.!

1 month ago 21
ARTICLE AD BOX

பிரபாஸுடன் மோதும் விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “மகாராஜா” படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக தொடர்ந்து கலக்கி வரும் நிலையில்,அவர் மீண்டும் பான் இந்தியா படமொன்றில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Prabhas vs Vijay Sethupathi

தமிழ் சினிமாவில் ஹீரோ,வில்லன்,குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி.தமிழ் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் ஷாருக்கானுடன் “ஜவான்” படத்தில் வில்லனாக நடித்தபோது,அந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.இதனால்,பாலிவுட்டில் அவருக்கு அதிக வில்லன் கதாபாத்திரங்கள் வரும் நிலை உருவானது.ஆனால் “வில்லனாக மட்டும் பயணிக்க மாட்டேன்” என்ற முடிவோடு விஜய்சேதுபதி இருந்தார்.

இதையும் படியுங்க: எதிர்பார்ப்பை எகிற வைத்ததா மோகன்லாலின் ‘எம்புரான்’…படத்தின் விமர்சனம் இதோ.!

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான “மகாராஜா” திரைப்படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் பெரிய வரவேற்பு பெற்றது.இதன் வெற்றிக்கு பிறகு அவர் “ஏஸ்” மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் என தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தார்.

இந்நிலையில்,தற்போது பிரபாஸ் நடிக்கும் “ஸ்பிரிட்” படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.இந்தப் படத்தை “அர்ஜுன் ரெட்டி” “அனிமல்” போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார்.இந்த பிரம்மாண்டமான பான் இந்தியா படத்தில்,வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  • Vijay Sethupathi in Spirit Movie வில்லனாக நடிப்பாரா விஜய்சேதுபதி…கொக்கி போடும் வில்லங்கமான இயக்குனர்.!
  • Continue Reading

    Read Entire Article