ARTICLE AD BOX
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!
இது குறித்து அதிமுக வௌயிட்டுள்ள அறிக்கையில், ‘மா’ சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ‘மா’ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டும்.
விடியா திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.6.2025 -வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலம் துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, எம்எல்ஏக்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் முன்னிலையிலும் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

6 months ago
70









English (US) ·