ARTICLE AD BOX
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு
ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் ரவி மோகன் குறித்த பேச்சுக்களாகவே இருக்கின்றன. அது மட்டுமல்லாது ரவி மோகன் கெனீஷாவுடன் ஜோடியாக ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் இவ்விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

தற்போது வரை ரவி மோகன், ஆர்த்தி ஆகிய இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விமர்சகர் பாரி சாலன் ரவி மோகனை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது சட்டபடி குற்றம்
“ரவி மோகனின் விவாகரத்து வழக்கு இன்னும் முடிவடையவில்லை. இவ்வாறு விவாகரத்து இன்னும் கிடைக்காத நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் பொது விழாக்களில் கலந்துகொள்வது என்பது தெரிந்து செய்யும் ஒன்றா அல்லது தெரியாமல் செய்யும் ஒன்றா?

பொது விழாவில் வேறொரு பெண்ணுடன் கலந்துகொண்டால் கண்டிப்பாக அது செய்தியாக மாறும் என அவருக்கும் நிச்சயமாக தெரியும். தெரிந்தும் ஏன் இதை அவர் செய்யவேண்டும்? அப்படி என்றால் இது செய்தி ஆகவேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமே என்று அர்த்தம்.
விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு செய்வது சட்டப்படி சரியா என்ன? சட்டம் கூட இரண்டாம் பட்சமாக வைத்துக்கொள்வோம். அவர் இப்படி செய்வது முதலில் நீதிநெறிக்குள்ளாகுமா? “ என பாரிசாலம் கேள்வி எழுப்பியுள்ளார்.