ARTICLE AD BOX
விஷால் சாய் தன்ஷிகா திருமணம்
47 வயதாகியும் பேச்சுலராகவே வலம் வந்த விஷால் வருகிற ஆகஸ்து மாதம் 29 ஆம் தேதி நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள உள்ளார். சாய் தன்ஷிகாவும் விஷாலும் 15 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தவர்கள். இதனை தொடர்ந்து தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்துகொள்வதாக உறுதி ஏற்றிருந்தார். அந்த வகையில் ஆகஸ்து மாதம் நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. அம்மாதமே விஷால்- சாய் தன்ஷிகா திருமணமும் நடைபெறவுள்ளது. இச்செய்தி ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் விஷால் காதல் உறவுகளில் இருந்தது குறித்தான ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
லிவ் இன் உறவில் இருந்த நடிகைகள்
விஷால் முதலில் வரலட்சுமி சரத்குமாரை காதலித்து வந்தாராம், இருவரும் பல நாட்கள் லிவ் இன் உறவில் இருந்தார்களாம். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்தில் பிரிந்துவிட்டார்களாம்.
இதனை தொடர்ந்து லட்சுமி மேனனுடன் விஷால் லிவ் இன் உறவில் இருந்தாராம். இந்த ஜோடியும் பிரிந்துவிட்டதாம்.
அதன் பின் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்.
அத்திருமணமும் நடக்கவில்லை. இதனை தொடர்ந்துதான் தற்போது சாய் தன்ஷிகாவை விஷால் திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.