ARTICLE AD BOX
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகை சாய் தன்ஷிகா பங்கேற்று திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடி Vibe செய்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை சாய் தன்ஷிகா செய்தியாளரை சந்தித்து பேசுகையில், “மேக்கப் தொழில் அதிகளவில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களே எடுத்து செயல்பட உள்ளனர்.
இதையும் படியுங்க: அந்த நடிகர் அப்படி பண்ணிருக்கக்கூடாது; ரொம்ப வருத்தமாகிடுச்சு- மனம் உடைந்த சேரன்…
SIBA நிறுவனம் நான்கு மாநிலங்களில் இருந்தும் பெண்களுக்கு சிறப்பாக வேலைகளை வழங்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரை இருந்து முதலில் துவங்கி உள்ளனர். பெண்களுக்காக முதன் முறையாக வேலை வழங்கக்கூடிய நிறுவனம். இதில் நான் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த படம் நடித்து கொண்டு இருக்கிறேன். இதனைத் தொடர்ந்து அடுத்த இன்னொரு படத்திலும் கமிட் ஆகியுள்ளேன். திருமணம் நடந்த பின்னரும் படத்தில் நடிப்பேன். எனக்கு தெரிந்த வேலை இது. ஒரு நாள் இரண்டு நாட்கள் வேலை இல்லை. என்னுடைய 15, 16 வருடங்களின் உழைப்பு”, என்றார்.
