ARTICLE AD BOX
காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே உள்ள பாலாஜி நகர் அரசு மதுபான கடையின் பின்புறம் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வசித்து வருபவர் ஜெய் சுரேஷ். இவருடைய மனைவி அஸ்வினி வயது 30 .
ஜெய் சுரேஷ் கூடுவாஞ்சேரி பகுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இரண்டு நாள் மூன்று நாளுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வந்து செல்வார்.
இந்த தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களது வீடு அமைந்துள்ள பகுதியின் அருகாமையில் மதுபான கடை இருப்பதாலும்,தனிமையான வீடு என்பதாலும் இவ்விரு குழந்தைகளுடன் அஸ்வினி வையாவூர் பகுதியிலுள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த புதன் கிழமை அன்று சுபநிகழ்ச்சி ஒன்றிக்கு சென்று விட்டு பாலாஜி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கிவிட்டு காலையில் வருவதாக தனது பெற்றோரிடம் அஸ்வினி கூறியுள்ளார்.
இந்த நிலையில் 24.07.2025 வியாழக்கிழமை பிற்பகல் மதியம் வரை அஸ்வினி வராததால் வீட்டிற்கு நேரில் சென்று உறவினர்கள் பார்த்த போது அஸ்வினி தலையில் பலத்த காயங்களுடன் ஆடைகள் இல்லாமல் நிர்வாண கோலத்தில் இரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.
இதனையெடுத்து இச்சம்பவம் குறித்து பொன்னேரி கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அஸ்வினியை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையெடுத்து மருத்துவமனையில் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேற்சிகிச்சைக்காக பெற்று வந்த அஸ்வினி சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்களை கொண்டு 5 குழு அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
அஸ்வினியை தாக்கியது யார்?எதற்காக தாக்கப்பட்டார். அவர்களது நோக்கம் என்ன? ஆடைகள் களைந்து நிர்வாண நிலையில் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டாரா? வீட்டில் உள்ள பொருட்கள் களவாடி சென்றார்களா என்கிற பல கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஸ்வினியை கடுமையாக கத்தி அல்லது இரும்பு ராடால் தாக்கிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் சிகிச்சை பலனின்றி இறந்த இளம் பெண்ணின் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியை உலுக்கிவிட்டது.

விசாரணையில், அரசு ஆட்டோ நகர் பகுதியில் வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பெயிண்டர் ஒருவரை பாலு செட்டி சத்திரம் அருகே வைத்து பொன்னேரிக்கரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

அஸ்வினியின் இறப்புக்கு நீதி கிடைக்காமல் சடலத்தை வாங்க மாட்டோம் என விசிக உள்ளிட்ட கட்சியினர் பொன்னேரி கரை காவல் நிலையத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
