ARTICLE AD BOX
பாமகவில் தந்தை மகன் மோதல் நாளுக்கு நாள் பெரிய தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், அன்புமணி ஆதரவாளர்களை நீக்கியும் வருகிறார்.
இதையும் படியுங்க: ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்.. திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு!
அதே போல ராமதாஸ் நீக்கம் நிர்வாகிகள் அன்புமணி மீண்டும் கட்சியில் இணைத்து வருகிறார். இந்த பிரச்சனை பெரிய விவகாரமாக மாறிய நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், என் பெயரை அன்புமணி பெயருக்கு பின்னால் பயன்படுத்தக்கூடாது, வேண்டுமென்றால் இனிஷியல் போட்டுக்கோ என பகிரங்கமாக கூறினார்.
இதனிடையே அன்புமணி உருக்கமான மடல் ஒன்றை எழுதியுள்ளார். நீங்கள் இல்லாமல் நான் இல்லை, இருவரும் ஒன்றாக சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், என் வீட்டில் இருந்து ஒட்டு கேட்கும் கருவி கைப்பற்றப்பட்டுள்ளது. என் நாற்காலி அருகே அந்த கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த கருவி யார் வைத்தார்? எதற்காக என்பதை ஆய்வு செய்து சொல்கிறேன். இந்த கருவி லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என கூறினார்.