ARTICLE AD BOX
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதிலிருந்து அதிமுகவில் அரசியல் களம் சூடு பிடித்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இரண்டு தினங்களுக்கு பின்பு மீண்டும் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு நேற்று இரவு வந்தார்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தனது வீட்டில் இருந்து போடி சென்றபோது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே செய்தி இருந்தால் நானே உங்களை கூப்பிடுகிறேன் என்று கூறி விட்டு போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்றார்.

1 month ago
43









English (US) ·