ARTICLE AD BOX
அப்படி இருந்தது இப்படி ஆகிடுச்சு
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாத்துறையில் எக்கச்சக்கமான தயாரிப்பாளர்கள் வலம் வந்தார்கள். ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தயாரிப்பாளர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் வெளிவருகிறது. அதுமட்டுமல்லாது முன்பை விட தற்போது வெளிவரும் இவர்களின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்வது போல் இல்லை எனவும் விமர்சனங்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் பேசிய கருத்து ஒன்று ரசிகர்கள் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாரும் சும்மாதான் இருக்குறாங்க!
“1970களில் இருந்து 2000 வரை பல தயாரிப்பாளர்கள் படமெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்களே இல்லை. 2000 ஆண்டிற்குப் பின் சரியத் தொடங்கியது” என கூறிய அவர், “நிறைய ஹீரோக்களை பார்த்தீர்கள் என்றால் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். ஷூட்டிங் எல்லாம் நடப்பதில்லை. உண்மையான நிலவரம் இதுதான்” எனவும் கூறினார். இவர் பேசிய வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
