ARTICLE AD BOX
கங்குவா தோல்வி
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் வெளிவந்து வெறும் ரூ.106 கோடியே வசூல் செய்தது. இதனால் இத்திரைப்படத்தை தயாரித்த ஞானவேல்ராஜாவிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
“கங்குவா” திரைப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என செய்திகள் வெளிவந்தன.எனினும் அவர் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டை காலி செய்த இயக்குனர்
இந்த நிலையில் சிறுத்தை சிவா குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது சிறுத்தை சிவா, அண்ணா நகரில் நிர்வாகித்து வந்த தனது அலுவலகத்தை காலி செய்து வேறு இடத்திற்கு மாற உள்ளாராம். “வீரம்” திரைப்படம் படமாக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்த அலுவலகத்தை அவர் நிர்வாகித்து வந்தாராம். ஆனால் கங்குவா பட தோல்விக்குப் பிறகு அந்த இடம் ராசி இல்லை என்று தோன்றியதாம். ஆதலால் விரைவில் வேறு இடத்தில் தனது அலுவலகத்தை இடமாற்ற உள்ளாராம்.