வீட்டைவிட்டு கிளம்பிய சிறுமிகள்.. வழக்கறிஞர் செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது?

8 hours ago 4
ARTICLE AD BOX

கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவிகளை, வழக்கறிஞர் மற்றும் இன்ஸ்டா நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், தக்கலை அருகே கணவரைp பிரிந்து இரு மகள்களுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வரும் இளம்பெண், கடந்த 12ஆம் தேதி இரவு அருகில் உள்ள ரப்பர் தொழில்சாலைக்கு பணிக்குச் சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் இரு மகள்களும் மாயமானதால் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

தக்கலை போலீசார், மாணவிகள் மாயம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, மாணவிகளைத் தேடி கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையில், தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்

அப்போது, மாயமான மாணவிகள் இருவரும் மார்ச் 13ஆம் தேதி அதிகாலை சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு, இளைஞர் ஒருவருடன் பைக்கில் வந்து இறங்குவதும், பின்னர் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் அந்த இளைஞருடன் பைக்கில் ஏறிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய தனிப்படை போலீசார், அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போது, அந்த இளைஞர் மாணவிகளை வடசேரி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேருந்தில் அனுப்பி வைக்கும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் அந்த இளைஞர் யார் என விசாரணை மேற்கொண்டதில், அவர் தக்கலை பகுதியைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான ராஜன் என்பவரின் மகன் அஜித்குமார் என்பதும், 32 வயதான அஜித்குமாரும் வழக்கறிஞர் என்பதும் தெரிய வரவே, அஜித்குமாரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 12ம் தேதி நள்ளிரவு தக்கலை பகுதியில் பைக்கில் அமர்ந்திருந்த போது, அந்தப் பகுதியில் சைக்கிளில் சுற்றித் திரிந்த மாணவிகள் இருவரையும் தான் விசாரித்ததாகவும், உறவினர் வீட்டிற்குச் செல்ல வந்ததாகக் கூறிய மாணவிகள், தன்னிடம் பைக்கில் வடசேரி பேருந்து நிலையத்தில் கொண்டு விடுமாறு லிப்ட் கேட்டதால் தான் அழைத்துச் சென்றதாகவும், சிறுமிகள் என்பதால் சுங்கான்கடை பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் மற்றும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வடசேரி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டதாகவும், சந்தேகத்தில் அவர்களின் செல்போண் எண்ணை வாங்கி வைத்திருப்பதாகவும் வேறு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

ஆனால் தனிப்படை போலீசார் தேநீர் கடையில் இருந்து கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளில் 8ஆம் வகுப்பு மாணவி அச்சத்துடன் அழுதபடி கைக்குட்டையால் கண்களை துடைத்தபடியும், 6ஆம் வகுப்பு மாணவி ஜாலியாக நிற்பதும் அஜித்குமார் சிகரெட் பிடித்தபடி பதட்டமாக நிற்பதும் பதிவாகியிருந்ததால், சந்தேகத்திலேயே அஜித்குமாரை அனுப்பி வைத்த போலீசார், குழப்பத்துடனே அஜித்குமார் கொடுத்த செல்போண் எண்ணை வைத்து மாணவிகள் குறித்து நான்கு நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.

செல்போண் அணைக்கப்பட்டிருந்ததால் மாணவிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய தனிப்படை போலீசார், வழக்கறிஞர் அஜித்குமாரையும் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். நான்கு நாட்களாக அஜித்குமாரையும் தனிப்படை போலீசாரும், மாணவிகளின் செல்போண் எண்ணை சைபர் கிரைம் போலீசாரும் கண்காணித்து வந்த நிலையில், அஜித்குமார் அடிக்கடி மாணவிகளின் செல்போணில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வந்ததை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனால் போலீசாருக்கு அஜித்குமார் மீது சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாணவிகளின் செல்போன் எண் ஆகி பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்த சைபர் கிரைம் போலீசார், டவர் லொக்கேஷன் மூலம் நெல்லை அருகே உள்ள ஒரு வீட்டில் மாணவிகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், மாணவிகளை மீட்டு தக்கலை காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், மாணவிகளிடம் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தாயும், தந்தையும் பிரிந்து வாழ்வதால் பாசமின்றி வளர்ந்து வந்த சகோதரிகளான மாணவிகள் இருவரும், வீட்டை விட்டு வெளியேறி ஜாலியாக ஊர் சுற்ற திட்டமிட்டு, 12ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த 10,000 ரூபாய் பணத்துடன் துணிமணிகளை பேக்கில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Sexual assault

இருவரும் தங்களது சைக்கிளில் பயணித்து 12ஆம் தேதி நள்ளிரவு தக்கலை வந்தடைந்து, எங்கே செல்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற போது, அங்கே பைக்கில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் அஜித்குமார் தங்களை மறித்து விசாரித்ததாகவும், பின்னர் நீங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளதால் போலீசாரிடம் பிடித்துக் கொடுக்க போவதாக மிரட்டியதாகவும், இதனால் அச்சமடைந்த தங்களை அஜித்குமார் மிரட்டி பைக்கில் அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதோடு, அலுவலகத்தில் தனது தங்கையை தனியாக அடைத்து வைத்து விட்டு தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை 8ஆம் வகுப்பு மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இரவு 11 மணிக்கு நடுவீட்டில் குதித்த கும்பல்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொடூரம்!

மேலும், அழுதபடி அலுவலகத்தில் இருந்த தன்னையும், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரியாத தங்கையையும் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருவரையும் மீண்டும் பைக்கில் ஏற்றி சுங்கான்கடை பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் மற்றும் ஐஸ்கிரீம் வாங்கித் தந்து சமாதானப்படுத்தி, பின்னர் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டாம்,

பேருந்தில் ஏறி எங்கையாவது சென்று ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புங்கள் என்றும், விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டி வலுக்கட்டாயமாக மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும், நெல்லையில் இறங்கி சுற்றித் திரிந்த தங்களின் செல்போண் சுவிட் ஆப் ஆனதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாகவும் சுற்றி திரிவதைக் கண்டு ஒருவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் தந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தக்கலை போலீசார் வழக்கை மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றிய நிலையில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கண்காணிப்பு வளையத்தில் இருந்த வழக்கறிஞர் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்ட அஜித்குமார், தான் செய்த கொடுஞ் செயலை மறைப்பதற்காக மாணவிகளை பேருந்தில் ஏற்றி ஏமாற்றி அனுப்பி வைத்ததாகவும், தன் மீது போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால் மாணவிகளை எப்படியாவது செல்போன்ல் தொடர்பு கொண்டு மீட்டு தாயாரிடம் ஒப்படைத்து தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தில் செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டதாகவும், ஆனால் செல்போன் ஆப் ஆனதால் மாணவிகளை தொடர்பு கொள்ள முடியாமல் வழக்கில் சிக்கி கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கறிஞர் அஜித்குமார் மீது மாணவிகளை மிரட்டி கடத்தி அடைத்து வைத்து பாலியல் வன் கொடுமை செய்தது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஏற்கனவே அஜித்குமார் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், நேற்று ஞாயிற்றுகிழமை வேறொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை அஜித்குமாரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஏற்கனவே தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், இந்த நிலையில் தான் பள்ளி மாணவிகளை மிரட்டி கடத்தி வன்கொடுமை செய்து போக்சோ வழக்கில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

  • Nayanthara asked for half of the profits as salary பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!
  • Continue Reading

    Read Entire Article