ARTICLE AD BOX
தடைக்கு காரணம் என்ன?
விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீர தீர சூரன் 2 திரைப்படம்,இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு ஆக்ஷன் திரில்லர் படம்.
இதையும் படியுங்க: சுக்கு நூறாக உடைந்த கார்.. பிரபல நடிகரின் மனைவிக்கு ஷாக்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
ரியா சுப்பு தயாரித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா,துஷாரா விஜயன்,சித்திக்,சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பொதுவாக,தமிழ் சினிமாவில் முதல் பாகம் வெளியான பிறகு தான் இரண்டாம் பாகம் வெளியாகும்.ஆனால் இயக்குநர் அருண்குமார்,முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு அதன் பிறகு முதல் பாகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (மார்ச் 27, 2025) திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த நிலையில்,பி4யூ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்ததால் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த படத்தின் வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
பி4யூ நிறுவனம்,வீர தீர சூரன் 2 படத்தில் முதலீடு செய்துள்ளதாகவும்,தயாரிப்பாளர் அந்த நிறுவனத்திடம் டிஜிட்டல் உரிமையை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்பதால்,அந்த நிறுவனம் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதனால் 50% நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பின் படி வீர தீர சூரன் 2 வெளியீட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை.தயாரிப்பு குழுவும் பிரச்சினையை தீர்த்து படம் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இடைக்கால தடையை எதிர்த்து,படக்குழு விரைவாக தீர்வு காண முயற்சி செய்து வருகிறது.படத்தின் தற்போதைய நிலைமை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு குழு விரைவில் வெளியிடலாம் என கூறப்படுகிறது.
