ARTICLE AD BOX
பத்ம பூஷன் அஜித்குமார்
நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது விருப்பத்திற்குரிய நடிகர் நாட்டின் உயரிய விருதை வாங்கியுள்ளது அவரது ரசிகர்கள் பலரையும் பெருமையில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் அஜித்குமார்.

விழாக்களில் கலந்துகொள்வதில்லை
அஜித்குமார் எந்த சினிமா விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. அதே போல் எந்த ஊடகனங்களுக்கும் பேட்டி கொடுப்பது இல்லை. இதனை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்துக்கொண்டு வருகிறார் அஜித்குமார். இந்த நிலையில் தற்போது அஜித்குமார் இந்தியா டூடே ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்குமார் ஊடகத்திற்கு பேட்டியளிப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கி வருகின்றனர். இந்த பேட்டி விரைவில் ஒளிபரப்பாகும் என்கின்றனர் இந்தியா டூடே குழுவினர்.

