வெங்கட் பிரபுவின் நவீன மதுவிடுதி? புதிய பிசினஸிற்குள் காலடி எடுத்துவைக்கும் GOAT இயக்குனர்!

1 month ago 41
ARTICLE AD BOX

இழுபறியில் சிவகார்த்திகேயன் பிராஜெக்ட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த “GOAT” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்திருந்தாலும் அத்திரைப்படம் ரூ.450 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. “GOAT” திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதாக ஒப்பந்தமாகியிருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன், “மதராஸி”, “பராசக்தி” ஆகிய திரைப்படங்களில் பிசியாகிவிட்டார். ஆதலால் வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயனின் காஷீட் கிடைக்காமலே இருந்தது. 

venkat prabhu start a resto bar business in srilanka

அமலாக்கத்துறை ரெய்டு

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்ட நிலையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பல ஆவணங்கள் சிக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான் வெங்கட் பிரபுவை அழைத்து “முழு திரைக்கதையையும் தயார் செய்யுங்கள், விரைவில் படப்பிடிப்பை தொடங்கிவிடலாம்” என சிவகார்த்திகேயன் கூறியுள்ளாராம். அந்த வகையில் வெங்கட் பிரபு இலங்கையில் இத்திரைப்படத்திற்கான டிஸ்கசனில் இருக்கிறாராம். 

மதுக்கடையை விலைக்கு வாங்கிய வெங்கட் பிரபு

இந்த நிலையில் இலங்கையில் ஒரு பழைய ரெஸ்டோ பார்-ஐ விலைக்கு வாங்கியுள்ளாராம் வெங்கட் பிரபு. அந்த மதுக்கடையை புதிப்பிக்கும் பொறுப்பை கலை இயக்குனர் ராஜீவனிடம் அளித்துள்ளாராம் வெங்கட் பிரபு. விரைவில் அந்த ரெஸ்டோ பாருக்கு திறப்பு விழா நடத்த உள்ளாராம் வெங்கட் பிரபு.   

  • venkat prabhu start a resto bar business in srilanka வெங்கட் பிரபுவின் நவீன மதுவிடுதி? புதிய பிசினஸிற்குள் காலடி எடுத்துவைக்கும் GOAT இயக்குனர்!
  • Continue Reading

    Read Entire Article